அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


கிரியான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல்தடப் போட்டி 2012

08 ஏப்பிரல் - கிரியான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2012 ஆம் ஆண்டு திடல்தடப் போட்டி, பாகன் செராய் தேசிய இடைநிலைப் பள்ளி திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர். இத்திடல்தடப் போட்டி பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. 
       இதில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 9 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்தனர். மேலும் இவ்வாண்டின் சிறந்த விளையாட்டு வீரனாக செல்வன் கிருபாகரனும், சிறந்த விளையாட்டு வீரங்கனையாக செல்வி ச.சுகாசினியும் தேர்வு பெற்றனர். இவ்விருவருமே செயிண்மேரி மாணவர்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று.0 comments: