அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


எழுத்தறிவித்தல் விழா 2012

03 மார்ச்சு- பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் பாலர்பள்ளி மாணவர்களுக்கு,  ஆண்டுவிழாவான எழுத்தறிவித்தல் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 35 பாலர்பள்ளி செல்வங்களோடு அவர்தம் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.  பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க.முருகையன் இவ்விழாவினை முன்னின்று நடத்தி வைத்தார். இப்பள்ளியில் தற்போது இரண்டு பாலர் வகுப்புகள் நடைபெறுகின்றன. அவ்வகுப்புகளின் பொறுப்பாசிரியர்களான செல்வி அழகேஸ்ரீ, திருமதி நாகலெச்சுமி ஆகிய இருவரின் அருமுயற்சியில் இவ்விழா இனிதே நடைபெற்றது.இவ்விழா இங்கு இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு பெற்றோர் ஆதரவு மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்திருந்தது.

2 comments:

k.veni said...

மிக்க நன்று.வாழ்த்துகள்.

தொடரவும்.

k.veni said...

வணக்கம்.ச்ங்கே முழங்கு.

வாழ்த்துகள், உங்கள் 'எழுத்தறிவித்தல் விழா' பணி தொடரட்டும்.

நன்றி,
க.கி.வேணி.