அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


பள்ளிப் பாடல்


பாரினி லேஒரு நேரில்லை யாம்உயர்

பைந்தமிழ் வாழியவே! - நம்

பாரிட்புந் தார்செயிண் மேரித் மிழ்ப்பள்ளி

வாழிய வாழியவே! (பாரினிலே)அன்பொளி வீசிடும் இன்பம லேசியம்

அழகிய பூஞ்சோலை - அதில்

பண்பொடு மூவினம் பாங்குற வாழ்ந்திடப்

பாடுவோம் பாமாலை! (பாரினிலே)நீர்வளம் நெல்வளம் நிறைவுடன் பல்வளம்

நிரம்பிடும் கிரயானில் - என்றும்

சீர்பெறும் கல்வியும் செல்வமும்; வாழ்வினில்

சிரித்திடும் இளவேனில்! (பாரினிலே)ஆசிருள் நீங்கிட அறிவொளி பாய்ச்சிடும்

ஆசான் குழுவாழ்க - அதில்

மாசறு பொன்னென மாண்புயர் வெய்திடும்

மாணவர் குலம்வாழ்க! (பாரினிலே)ஈன்றவர் சான்றவர் இன்புறக் கல்வியில்

இமயத்தை நாமடைவோம் - உயிர்

போன்றநம் மரபையும் மொழியினம் நாட்டையும்

போற்றியே காத்திடுவோம்! (பாரினிலே)ஆக்கம்:-

இறையருட் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

பினாங்கு


0 comments: