அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


பள்ளி வலைப்பதிவு அறிமுக நிகழ்ச்சி

நிகழ்ச்சி: பள்ளி வலைப்பதிவு (Weblog) அறிமுக நிகழ்ச்சி
நாள்: 01-10-2010 (வெள்ளி)
இடம்: பாவாணர் பேரணி மண்டபம்

செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் வலைப்பதிவு 'வெளிச்சம்' அதிகாரப்படியாக அறிமுகம் கண்டது. இதனைப் பள்ளித் தலைமையாசிரியர் இரா.கோவிந்தராஜு அறிமுகப்படுத்தினார். பள்ளி மடலாக வெளிவந்துகொண்டிருக்கும் 'வெளிச்சம்' இதழ் இதன்வழி இணையப் பதிப்பாக மலர்ந்தது. இந்த வலைப்பதிவை வடிவமைப்புச் செய்த ஆசிரியர் திரு.சுப.சற்குணன் அறிமுக உரை நிகழ்த்தினார். ஆசிரியர் திரு.கி.விக்கினேசு நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார். பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். பள்ளியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments: