அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


கிரியான் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான எழுவர் காற்பந்துப்போட்டி 2013

26 பிப்பிரவரி 2013 - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று மாலை கிரியான் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான  எழுவர் காற்பந்துப்போட்டி சிறப்பாக நடந்தேறியது. கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிமாலை மணி 2.30க்குத் தொடங்கியது. பல பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை கருதி மற்ற அருகாமை பள்ளிகளோடு இணைந்து குழு உருவாக்கி பங்கு பெற்றது பாராட்டுக்கு உரியது. இப்போட்டியில் ஆசிரியர்தம் வளமான ஒத்துழைப்பும் பங்கும் அளப்பரியது.செயிண்மேரி குழு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிபடுத்தியது. அதிக கோல் எண்ணிக்கை கொண்ட குழுவாகத் தெரிவு செய்யப்பட்டது.   
































வெளிச்சம் இதழ் 24 (04-02-2013)



அலோர் சுடார் கல்விச் சுற்றுலா 2012

14 சூலை - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் முதலாம் படிநிலை மாணவர்கள் , அலோர் சுடார் நகரத்திற்குச் சுற்றுலா மேற்கொண்டனர். இதில் 33 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். நெல் அருங்காட்சியகம், தேசிய அறிவியல் கூடம், மாநில அருங்காடியகம், அலோர் சுடார் கோபுரம் போல இன்னும் பல இடங்களை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர். ஆசிரியை திருமதி.கிறிஸ்னேஸ்வரி தலைமையில் இச்சுற்றுலா வெற்றிகரமாக அமைந்தது.