அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


பொங்கல் விழா

நிகழ்ச்சி: பொங்கல் விழா - 2010 (Perayaan Ponggal)
நாள்: 13 - 16-01-2010 / இடம்: பள்ளி வளாகம்


பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொங்கல் விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது. ஒரு வார விழாவாக பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளுடன் இப்பொங்கல் விழா நடந்தது. பொங்கல் பாணை வண்ணம் தீட்டுதல், ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுதல், அலங்காரப் பொங்கல் முதலான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். இதன் நிறைவு விழா _____ அன்று நடைபெற்றது. அன்றைய நாளில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கலிட்டனர். மாணவர்கள் பொங்கல் திருநாள்  சார்ந்த பாடல்கள், கும்மி, கோலாட்டம், கபடி முதலான படைப்புகளை வெகுச் சிறப்பாகப் படைத்து பாராட்டைப் பெற்றனர். நிறைவு விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் கலந்துகொண்டது விழாவுக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்திருந்தது.பொங்கல் வாழ்த்து சொல்லும் மாணவிகள்
பாலர் வகுப்பு - வண்ணம் தீட்டும் போட்டி
பொங்கல் பாணை வண்ணம் தீட்டுதல்
வகுப்பை அலங்கரிக்கும் மாணவர்கள்
பொங்கல் கோலம் - 6 மல்லிகை மாணவிகள்

ஆசிரியர் செல்வி இர.புனிதா கோலமிடுகிறார் - 5 மல்லிகை

6 ரோசா மாணவர்களுடன் ஆசிரியர் திரு.கி.விக்கினேசு
6 மல்லிகை மாணவர்களுடன் ஆசிரியர் திருமதி புவனேஸ்வரி
அலங்காரப் பொங்கலுடன் ஆசிரியர் திரு.ஜீவன் - 4 ஆதாளி
கும்மிப்பாட்டு - 6 மல்லிகை மொட்டுகள்
அலங்காரப் பொங்கல் - 5 மல்லிகை
5 ரோசாவின் அலங்காரப் பொங்கல் - ஆசிரியர் செல்வி அணிகலா
தலைமையாசிரியருக்கு வரவேற்பு
பொங்கலிடும் ஆசிரியர்கள்
கரும்புக் கட்டி பொங்கல்
ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் பால் பொங்கல்


0 comments: